இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை அசோக் செல்வனும், அபிநயா செல்வமும் இணைந்து துவங்கியிருக்கும் ‘ஹேப்பி ஹை பிக்சர்ஸ்’ என்ற நிறுவனமும், டில்லி பாபுவின் ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இப்படம் குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான அபிநயா செல்வம் கருத்து தெரிவிக்கையில், ‘காதல் எப்படி சாகாவரம் பெற்றதோ அது போல் காதல் கலந்த நகைச்சுவை படங்கள் உலகெங்ங்கும் உள்ள சினிமா ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு பெறும் படங்களாகதான் இருக்கும். அந்த வரிசையில் இப்படம் இருக்கும்’ என்று கூறியுள்ளார். படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த படத்திற்கு ‘மேயாத மான்’ மற்றும் ‘எல்.கே.ஜி.’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்கிறார். லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார்.
#OhMyKadavulae #RitikaSingh #AshokSelvan #AbinayaSelvam #DiliBabu #AxessFilmFactory #HappyHighPictures #LeonJames #VidhuAyyanna #BoopathiSelvaraj
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...
செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் படம்...