சிவகார்த்திகேயன் படத்தை கைபற்றிய விக்ரம் பட தயாரிப்பாளர்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தை கேரளாவில் ஷிபு தமீனின் தமீன்ஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

செய்திகள் 23-Sep-2019 12:19 AM IST Top 10 கருத்துக்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’. சிவகார்த்திகேயன் நடிக்கும் 16-ஆவது படமான இப்படம் வருகிற 27-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் கேரள விநியோக உரிமையை ஷிபு தமீனின் ‘தமீன் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் கைபற்றியுள்ள அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ’புலி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், விக்ரம் நடிப்பில் ‘இருமுகன்’, ‘சாமி-2’ ஆகிய படங்களை தயாரித்தவருமான ஷிபு தமீன் ஏற்கெனவே பல தமிழ் படங்களை கேரளாவில் விநியோகம் செய்துள்ள நிலையில் இப்போது சிவகார்த்திகேயன் படத்தையும் வெளியிடுகிறது. ஷிபு தமீன் தற்போது மலையாள நடிகர் திலீப் மற்றும் அர்ஜுன் நடிப்பில் ‘JACK DANIEL’ என்ற மலையாள படத்தையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நம்ம வீட்டுப் பிள்ளை’யில் சிவகார்த்திகேயனுடன் அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ், நட்டி நட்ராஜ் என்று பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசை அமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ரூபன் கவனித்துள்ளார்.
#DirectorPandiraj #NammaVeettuPillai #DImman #SivaKarthikeyan #SunPictures #NirovShah #Veerasamar #AnuEmmanuel #AishwaryaRajesh #ShibuThameens #Thameens #ThameensRelease #NVPFromSeptember27

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Mr லோக்கல் டீஸர்


;