சூப்பர் டூப்பர் – விமர்சனம்

சூப்பர் டூப்பர் – ஜாலி!

விமர்சனம் 21-Sep-2019 1:10 PM IST Top 10 கருத்துக்கள்

Direction: Arun Karthik
Production: Flux Films
Cast: Dhruva, Indhuja, Shah Ra
Music: Divakara Thiyagarajan
Cinematography: Thalapathy Rathnam Sundar Ram Krishnan
Editor: mugan vel


அறிமுக இயக்குனர் ஏகே என்கிற அருண் கார்த்திக் இயக்கத்தில் ‘ஆண்மை தவறேல்’ படத்தில் நடித்த துருவாவும், இந்துஜாவும் இணைந்து நடித்து வெளியாகியுள்ள ‘சூப்பர் டூப்பர்’ டைட்டிலுக்கு ஏற்ற படமாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

கதாநாயகன் துருவா தனது மாமா ஷிவ ஷாராவுடன் இணைந்து சின்ன சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் போலீஸ் அதிகாரியின் மகளான இந்துஜாவை ஒரு கும்பல் கடத்துகிறது. இந்துஜாவை துருவா காப்பாற்றுகிறார். இந்நிலையில் இந்துஜாவின் காரில் இருந்த பல கோடி மதிப்பிலான போதை பொருள் துருவாவுக்கு கிடைக்கிறது. அந்த போதை பொருளை தேடி துருவாவையும், இந்துஜாவையும் ஒரு கும்பல் துரத்துகிறது. அவர்களிடமிருந்து துருவாவும், இந்துஜாவும் எப்படி தப்பிக்கிறார்கள்? போதை மருந்து கடத்தல் கும்பலின் பின்னணி என்ன? என்பதை பிளாக் காமெடி பாணியில் சொல்லியிருக்கும் படமே ‘சூபப்ர் டூப்பர்’

படம் பற்றிய அலசல்

படம் பார்க்க வருபவர்களை இரண்டு மணிநேரம் காமெடி, ஆக்‌ஷன், கவர்ச்சி என்று எந்த லாஜிக் விஷயங்களும் இல்லாமல் ரசிக்க வைத்தால் போதும் என்ற முடிவோடே இப்படத்தை இயக்கியுள்ளர் ஏகே. அதில் அவர் ஓரளவுக்கு வெற்றி பெறும்விதமாக படமும் அமைந்துள்ளது என்று சொல்லலாம். போதை மருந்து கடத்தல் கும்பலிடமிருந்து போதை மருந்தை சுட்டுக்கொண்டு வருவது, அந்த மருந்தை அதே கும்பலிடமே விற்க சென்று மாட்டிக்கொள்வது என்று சிரிக்க வைக்க கூடிய நிறைய காடிசிகளுடன் படம் பயணித்து, கடைசியில் இந்துஜாவின் அப்பா, அம்மா, அண்ணன் ஆகியோர் பற்றிய சஸ்பென்ஸ் வெளிப்படும்போது கதை சீரியஸ் கட்டத்திற்கு வருகிறது. இந்த சீரியஸ் விஷயத்தை வைத்தே கதையை சீரியஸாக சொல்லியிருந்தால் படம் இன்னும் கவனம் பெற்றிருக்கும். அதைப் போல ஒன்றுக்கும் மேற்பட்ட வில்லன்கள், ஏகபட்ட அடியாட்கள், யார் யாரை தாக்குகிறார்கள், ஆக்‌ஷன் காட்சிகளுக்கு இடையே வரும் கார்ட்டூன் ஆக்‌ஷன் ஓவியங்கள் வருவது என்று குழப்பத்தை ஏற்படுத்தும் காட்சிகளை தவிர்த்து கதையை நகர்த்தியிருந்தால் ‘சூப்பர் டூப்பர்’ டைட்ட்லுக்கு ஏற்ற படமாக அமைந்திருக்கும். திவாகரா தியாகராஜனின் பின்னணி இசை, தளபதி ரத்னம், சுந்தர் ராமகிருஷ்ணம் ஆகியோரின் ஒளிப்பதிவு, முகன் வேலின் படத்தொகுப்பு ஆகியவை கதையின் தன்மைக்கு ஏற்ப சிறப்பாக அமைந்துள்ளது.நடிகர்களின் பங்களிப்பு

கதாநாயகனாக நடித்திருக்கும் துருவா அடிதடி, ஆக்‌ஷன், நடனம் என்று தனக்கு கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். இந்துஜாவுக்கு கிளாமர், எமோஷன்ஸ் கலந்த கேரக்டர்! தன்னை எதற்காக கடத்தியிருக்கிறார்கள் என்பது தெரியாமல் தவிப்பது, கடைசியில் எதற்காக தனது அப்பா கொலை செய்யப்பட்டார், அந்த கொலைக்கு காரணமானவர் யார் என்பது தெரிய வந்து அதிர்ச்சியுறுவது என்று இந்துஜாவுக்கு இப்படத்தில் நடிக்க நிறைய ஸ்கோப் உள்ள கேரக்டர்! அதில் சிறப்பாக நடிக்கவும் செய்துள்ளார் இந்துஜா! துருவின் மாமாவாக வரும் ஷிவ ஷாரா நிறைய இடங்களில் சிரிக்க வைக்கிறார். அதே நேரம் சில இடங்களில் அவரது செய்கைகளும் நடிப்பும் போரடிக்க வைக்கவும் செய்கிறது! போதை மருந்து கடத்தல்கரராக வரும் ஆதித்யா, ராயபுரம் ரௌடி வேதாவாக வரும் ஸ்ரீனி என்று படத்தில் பங்கேற்றிருக்கும் அத்தனை பேரும் தங்களது கேரக்டர்களுக்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1.கதையின் இறுதியில் வரும் சஸ்பென்ஸ்

2.காமெடி

பலவீனம்

1.சீரியஸான விஷயங்களை காமெடியாக சொல்லியிருப்பது!

2.குழப்பத்தை ஏற்படுத்தும் ஏகப்பட்ட வில்லன்கள், அடியாட்கள் கேரக்டர்கள்!

மொத்தத்தில்…

படத்தின் கதையை நேரடியாக சொல்லாமல், காட்சிகளையும் சம்பவங்களையும் முன் பின் மாற்றி போட்டு வித்தியாசமாக இயக்கி ரசிக்க வைக்க முயன்றுள்ளார் இயக்குனர்! இந்த முயற்சியை தவிர்த்து சொல்ல வந்த கதையை எல்லோருக்கும் புரியும்படி நேரடியாகவே சொல்லியிருந்தால் ‘சூப்பர் டூப்பர்’ சூப்பர் என்று பாராட்டபட்டிருக்கும்!

ஒருவரி பஞ்ச்: சூப்பர் டூப்பர் – ஜாலி!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மகாமுனி -டீஸர்


;