பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’. சிவகார்த்திகேயன் நடிக்கும் 16-ஆவது படமான இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ், நட்டி நட்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசை அமைக்கும் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் சென்சார் காட்சியும் சமீபத்தில் நடந்தது. ‘நம்ம வீட்டுப் பிள்ளை’க்கு ‘U’ சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ளதை தொடர்ந்து இப்படம் வருகின்ற 27-ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் படத்தொகுப்பை ரூபன் கவனித்துள்ளார்.
#DirectorPandiraj #NammaVeettuPillai #DImman #SivaKarthikeyan #SunPictures #NirovShah #Veerasamar #AnuEmmanuel #AishwaryaRajesh #NammaVeettuPillaiFromSeptember27th
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’ நிறுவனமும், கோட்டபடி ராஜேஷின் கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனமும்...