சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, சுதீப், தமன்னா, ஜகபதி பாபு என்று பெரும் நடசத்திர பட்டாளம் நடிப்பி தெலுங்கில் உருவாகியுள்ள படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. ராயல்சீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. இந்த படம் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியாக இருக்கிறது. சிரஞ்சிவியின் மகன் ராம் சரண் தேஜா மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கி உள்ளார். தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ஆர்.பி.சௌத்ரியின் ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் கைபற்றியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ள இந்த படம் கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
#SuperGoodFilmsRelease #KonidelaProductionCompany #VijaySethupathi #Nayanthara #Chiranjeevi #Tamannaah #AmitabhBachchan #AmitTrivedi #SuperGoodFilms #SyeRaaNarasimhaReddy
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...