‘பிகில்’ ரிலீஸ் – புதிய தகவல்!

விஜய்யின் ‘பிகில்’ தீபாவளி அன்றுதான் வெளியாகுமாம்!

செய்திகள் 16-Sep-2019 11:59 PM IST Top 10 கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘பிகில்’. ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘பிகில்’ தீபாவளிக்கு முன்னதாகவே அதாவது அக்டோபர் 24-ஆம் தேதி, அல்லது அக்டோபர் 25-ஆம் தேதி அன்று வெளியாகி விடும் என்ற தகவல்களும் வெளியாகி இருந்தது. தீபாவளி அக்டோபர் 27- ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வருவதால் அதற்கு முன்னதாக ‘பிகில்’ படத்தை வெளியிடுவதாக இருந்தால் வியாழன், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் நல்ல வசூலை பார்த்துவிடலாம் என்ற காரணத்தால் ‘பிகில்’ படத்தை தீபாவளிக்கு முன்னதாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர் என்று சொல்லப்பட்டது. ஆனால் ‘பிகில்’ படம் தீபாவளிக்கு வருவதையே விஜய் ரசிகர்கள் விரும்புவதால் தீபாவளி அன்று ‘பிகில்’ படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘பிகில்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாளை மறுநாள் (செப்டம்பர்-19) நடக்க இருக்கும் நிலையில் ‘பிகில்’ ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Bigil #Vijay #Thalapathy63 #Atlee #Nayanthara #ARRahman #BigilFromOctober27th #BigilFromDiwali #Nayanthara #YogiBabu #Kathir

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;