இயக்குனர் மணிரத்னம் தயாரிக்க, சுசிகணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கனிகா. அதன் பிறகு சேரனின் ‘ஆடோகிராஃப்’, அஜித்தின் ‘வரலாறு’ உட்பட பல தமிழ் படங்களில் நடித்த கனிகா ஒரு சில தெலுங்கு, கன்னட படங்கள் மற்றும் நிறைய மலையாள படங்களில் நடித்தார். கடந்த சில வருடங்களாக மலையாள திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கனிகா நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் ‘ஒகே கண்மணி’. மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில் கனிகா ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். இந்த படத்தை தொடர்ந்து கனிகா மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரியாகிறார். விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க கனிகா கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது. நடிகையாக மட்டுமல்லாமல் ‘சச்சின்’ படத்தில் ஜெனீலியாவுக்கும், ‘அந்நியன்’ படத்தில் நடித்த சதாவுக்கும் ‘சிவாஜி’ படத்தில் நடித்த ஸ்ரேயாவுக்கும் கனிகாதான் குரல் (டப்பிங்) கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Kanika #VijaySethupathi #Varalaru #FiveStar #OKKanmani #Sachin #Anniyan #Sivaji
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘96’. பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இப்படம்...