‘திட்டம் போட்டு’ 27-ஆம் தேதி களம் இறங்கும் ‘கயல்’ சந்திரன்!

‘கயல்’ சந்திரன், சாதனா டைட்டஸ் இணைந்து நடிக்கும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ இம்மாதம் 27-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 16-Sep-2019 11:18 PM IST Top 10 கருத்துக்கள்

‘கயல்’ சந்திரன், சாதனா டைடஸ் இணைந்து நடித்துள்ள ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் இப்படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. ‘2 MOVIE BUFF’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை சுதர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ‘கயல்’ சந்திரன், சாதனா டைட்டஸுடன் முக்கிய பாத்திரத்தில் பார்த்திபனும் நடித்துள்ளார். இந்த படத்தை இம்மாதம் 27-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இந்த படத்தை தமிழகம் முழுக்க SDC பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது. இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கும் சுதர் படம் குறித்து பேசும்போது, ‘‘கிரிக்கெட் உலக கோப்பையை திருடுவதே ஒரு தனித்துவமான யோசனைதான். அதையும் தாண்டி திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் நான் என்ன தனித்துவம் செய்திருக்கிறேன் என்றால் இப்படத்தில் இடம் பெறும் எல்லா காட்சிகளும் இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளாக இருக்கும்’’ என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவை மார்டின் ஜோ கவனிக்க, அஷ்வத் இசை அமைத்துள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ‘கயல்’ சந்திரன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தவிர சந்திரன் நடிப்பில் அடுத்து ‘கிரகணம்’, ‘பார்ட்டி’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டிரைலர்


;