சுந்தர்.சி.படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி!

VZ துரை இயக்கத்தில் சுந்தர்.சி. தனிஷிகா நடிக்கும்  ‘இருட்டு’ அக்டோபர் 11-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 15-Sep-2019 11:24 PM IST Top 10 கருத்துக்கள்

‘முகவரி’, ‘நேபாளி’, ‘தொட்டி ஜெயா’ முதலான படங்களை இயக்கிய V.Z. துரை இயக்கத்தில் சுந்தர்.சி., தன்ஷிகா முக்கிய கேரக்டர்களில் நடித்து வந்த படம் ‘இருட்டு’. ‘ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்து வந்த இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் இப்படம் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சுந்தர்.சி. இயக்கும் படங்களுக்கு இசை அமைக்கும் ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் சுந்தர்.சி., தன்ஷிகாவுடன் சாக்சி பர்வீந்தர், வி.டி.வி.கணேஷ், யோகி பாபு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள் கிரிஷ் இசை அமைத்துள்ளார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ஆர்.சுதர்சன் கவனிக்க, கலை இயக்கத்தை ஏ.கே.முத்து கவனித்துள்ளார். சுந்தர்.சி.போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படம் வித்தியாசமான ஹாரர் படமாக உருவாகி உள்ளது என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;