‘காப்பான்’ - முக்கிய வேண்டுகோள் விடுத்த சூர்யா!

‘காப்பான்’ பட நிகழ்ச்சியில்  ரசிகர்களுக்கு முக்கிய வேண்கோள் வைத்த சூர்யா!

செய்திகள் 15-Sep-2019 11:17 PM IST Top 10 கருத்துக்கள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா முதலானோர் நடிக்கும் ‘காப்பான்’ திரைப்படம் வருகிற 20ஆம் தேதி உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் வெளியாக இருக்கிறது. ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘காப்பான்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்து.

‘‘பிரதமரின் பாதுகாப்புக்காக இயங்கும் SPG டீமை சேர்ந்த ஒருவரது வாழ்க்கை பற்றி பேசும் படம் ‘காப்பான்’. இந்திய சினிமாவில் இந்த பின்னணியை வைத்து இதுவரை யாரும் படம் பண்ணியதில்லை’’ என்று இப்படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் இந்த சந்திப்பில் தெரிவித்தார்.

கே.வி.ஆனந்தை தொடர்ந்து படத்தின் ஹீரோ சூர்யா பேசும்போது, ‘‘காப்பான்’ வருகிற 20-ஆம் தேதி ரிலீசாகிறது. ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் ரசிகர்கள் கட்-அவுட்கள் பேனர்கள் வைப்பது வழக்கம். ஆனால் இப்போது சமூகத்தில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கு ஏற்ப நடக்க வேண்டிய கடமை, பொறுப்பு நாம் எல்லோருக்கும் உண்டு! அதனால் எனது ரசிகர்கள் எந்த ஊரிலும் கட்-அவுடகள், பேனர்கள் வைக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கட்-அவுட், பேனர் வைத்து தான் அன்பை வெளிப்படுத்த வேண்டும், என்னை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசாங்க பள்ளிகளுக்கு செய்யும் உதவிகள் மற்றும் ரத்ததான முகாம்களே போதுமானது. மற்றவர்களுக்கு செய்யும் உதவிகள் மூலம் நாம் சந்தோஷத்தை பரிமாறிக்கொள்ளலாம். அதனால் இதை எனது வேண்டுகோளாக ஏற்று எல்லோரும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

‘காப்பான்’ கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நான் நடிக்கும் மூன்றாவது படம்! நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் கேரளா, ஆந்திரா என்று மற்ற மாநிலங்களிலும் வெளியாகிறது. ‘காப்பான்’ தெலுங்கில் ‘பந்தோபஸ்து’ என்ற பெயரில் வெளியாகிறது. கேரளாவில் தமிழ் மொழியிலேயே வெளியாகிரது. நமது சமூகத்தில் முக்கிய துறைகளில் பணியாற்றும் சிலர் பற்றி நமக்கு தெரியாது. காரணம் அவர்கள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. அதனால் அவர்கள் பற்றி அதிகம் யாருக்கும் தெரிய வாய்ப்பும் கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு துறையில் பணியாற்றுபவர்கள் பற்றிய படம்தான் ‘காப்பான்’. அதாவது பிரபலங்கங்ளுக்கு பாதுகாப்பு கொடுக்கிற ‘ எஸ்.பி.ஜி.’ என்ற அமைப்பை மையப்படுத்திய கதை ‘காப்பான்’. இதில் நான் கமாண்டோ வீரராக நடித்துள்ளேன். அதே நேரம் இப்படம் அரசியல் மற்றும் விவசாயம் பற்றியும் பேசும் படமாகவும் இருக்கும். எல்லோரும் ‘காப்பான்’ படத்தை தியேட்டருக்கு வந்து பாருங்கள்’’ என்றார் சூர்யா!

.
#Kaappaan #KVAnand #LycaProductions #Suriya37 #Bandobast #HarrisJayaraj #SunTV #Anthony #KaappaanFromSeptember20th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;