அப்பாவுடன் இசை அமைத்திருப்பது குறித்து யுவன் ட்வீட்!

‘மாமனிதன்’ படத்திற்காக இளையராஜாவுடன் இணைந்து இசை அமைத்திருப்பது குறித்து யுவன் சங்கர் ராஜா…

செய்திகள் 14-Sep-2019 3:34 PM IST Top 10 கருத்துக்கள்

‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு இயக்குனர் சீனுராமசாமியும், விஜய்சேதுபதியும் இணைந்துள்ள படம் ‘மாமனிதன்’. கிராமத்துப் பின்னணியில் நடக்கும் கதையைகொண்ட இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குருசோமசுந்தரம், மலையாள நடிகை கே.பி.ஏ.சி.லலிதா உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு இளையராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைக்கிறார்கள் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த படத்திற்கு இளையராஜாவுடன் இசை அமைத்திருப்பது குறித்து யுவன் சங்கர் ராஜா, இளையராஜா ஹார்மோனியம் வாசிப்பது மாதிரியான ஒரு புகைப்படத்துடன் ட்வீட் செய்திருப்பதில், ‘‘மாமனிதன்’ படத்தில் முதல் முறையாக நானும் அப்பாவும் இணைந்து வேலை செய்துள்ளோம். ‘மாமனிதன்’ பாடல்கள் நிச்சயம் இசை ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சங்கத்தமிழன்’ அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு விவேக், மெர்வின் இசை அமைத்துள்ளனர். இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன்’ படம் குறித்து யுவன் சங்கர் ராஜா ட்வீட் செய்துள்ள இந்த தகவல் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் தகவலாக அமைந்துள்ளது. எம்.சுகுமர் ஒளிப்பதிவு செய்துள்ள ‘மாமனிதன்’ படத்தின் படத்தொகுப்பு வேலைகளை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார். ‘சங்கத்தமிழன்’ படத்தை தொடர்ந்து ‘மாமனிதன்’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;