‘செகண்ட் ஷோ’வில் அஜ்மல், பல்லவி சுபாஷ்!

அஜ்மல், பல்லவி சுபாஷ் இணைந்து நடிக்கும் படம்  ‘செகண்ட் ஷோ’

செய்திகள் 14-Sep-2019 12:52 PM IST Top 10 கருத்துக்கள்

‘அஞ்சாதே’, ‘கோ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் அஜ்மல். இவர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘செகண்ட் ஷோ’. முழுக்க முழுக்க லண்டனில் படமாகி வரும் இந்த படத்தை ‘Darkroom Creations’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. சஸ்பென்ஸ், த்ரில்லர் ஃபேண்டசி கதையாக உருவாகும் இந்த படத்தை A.T.ஞானம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் அஜ்மலுடன் பல்லவி சுபாஷ், அக்‌ஷதா சோனவானே, பூஜா மான்டேல், ஹேமல், வித்யா, பிளாக் பாண்டி, இஷா சப்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு L.K.விஜய் ஒளிப்பதிவு செய்ய, ரங்கிஸ் படத்தொகுப்பு செய்கிறார். வேகமாக வளர்ந்து வரும் இப்படத்தை மிக விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படம் தவிர அஜ்மல் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ‘நுங்கம்பாக்கம்’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

#AjmalAmeer #PallaviSubhash #ATGnanam #DarkroomCreations #AkshataSonawane #Nungambakkam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;