ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த பிரபல இயக்குனர்!

ஜி.வி.பிரகாஷும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் முதன் முதலாக இணையும் படம்!

செய்திகள் 14-Sep-2019 12:37 PM IST Top 10 கருத்துக்கள்

‘கே.புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவன்ம் தயாரிக்க, எஸ்.என்.ராஜராஜன், ஜி.வி.பிரகாஷ்குமார் இணைந்து நடிக்க, ஒரு படம் உருவாகிறது என்றும் இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார் என்றும் தகவலை நேற்று வெளியிட்டிருந்தோம். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லமா நடிக்க, இவர்களுடன் வாகை சந்திரசேகர், அறிமுக நடிகர் குணா ஆகியோரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இப்போது இந்த படத்தில் நடிகராக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் இணைந்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷும், இயகுனர் கௌதம் வாசுதேவ் மேனனும் இணைந்து பணியாற்றும் முதல் படம் இதுவாகும். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணிவாராக நடிக்கிறார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்‌ஷன் கலந்து சொல்லும் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்க, விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை இளையராஜா கவனிக்கிறார்.

#KProductions #GVPrakashKumar #GauthamVasudevMenon #GVM #VaagaiChandrasekar #Guna #VarshaBollama

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என்னை நோக்கி பாயும் தொட்டே ட்ரைலர்


;