ஒங்கள போடணும் சார் – விமர்சனம்

திட்டம் போட்டு பழிவாங்கும் கதை!

விமர்சனம் 13-Sep-2019 5:13 PM IST Top 10 கருத்துக்கள்

PRODUCTION : ZIGMA FILMS
DIRECTION : R L RAVI, PRADEEP
CAST : ‘JITHAN’ RAMESH, SANUJA, JONITA, ANU
MUSIC : RAJIMON
CINEMATOGRAPHY : S.SELVAKUMAR
EDITING : VISHNU


அறிமுக இயக்குனர் R.L.ரவி, ஸ்ரீஜித் விஜயன் இணைந்து இயக்க, ‘ஜித்தன்’ ரமேஷ், சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு, பரிச்சிதா, வைஷாலி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஒங்கள் போடணும் சார்’. ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நயன்தாரா பார்த்திபனை பார்த்து பேசும் வசனத்தை டைட்டிலாக கொண்டு, ‘A’ சர்டிஃபிக்கெட்டுடன் வெளியாகியுள்ள ‘ஒங்கள போடணும் சார்’ எப்படி?

கதைக்களம்

மனோபாலா நடத்தி வரும் டி.வி. சேனல் ‘ஒரு பேய் ஒரு கோடி’ என்ற பெயரில் கேம் ஷோ ஒன்றை நடத்துகிறது. பேய் இருப்பதாக சொல்லப்படும் மர்ம பங்களா ஒன்றில் இந்த கேம் ஷோ ஒரு வாரம் நடக்க இருக்கும் நிலையில், பேய் நம்பிக்கை இல்லாத ‘ஜித்தன்’ ரமேஷ் உட்பட நான்கு இளைஞ்ரகள், சனுஜா சோமநாத், அனு உள்ளிட்ட நான்கு இளம் பெண்கள் என 8 பேர் இந்த கேம் ஷோவில் கலந்துகொள்கிறார்கள். அந்த பங்களாவுக்குள் ஒரு வாரக்காலம் தங்கும் இந்த 8 பேர் சம்பந்தப்பட்ட விஷயங்களை தொலைகாட்சி நேயர்களுக்கு நேரடி நிகழ்ச்சியாக வழங்கி வரும் நிலையில், போட்டியாளர்களில் இருவர் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள்! இவர்களது மரணத்துக்கான காரணம் என்ன என்பதற்கான விடைகளே ‘ஒங்கள போடணும் சார்’.

படம் பற்றிய அலசல்

பிரபலமான ஒரு தொலைகாட்சி கேம் ஷோவை நினைவுப்படுத்துவது மாதிரியான ஒரு கேம் ஷோ பின்னணியில், சில டிவிஸ்டுகளுடன் ‘பழிக்கு பழி வாங்கும்’ கதையாக, இப்படத்தை இயக்கியிருக்கிறார்கள் R.L.ரவி, ஸ்ரீஜித் விஜயன் ஆகியோர்! படம் பார்க்க வருபவர்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் விஷயங்களை கொடுத்தால் போதும் என்ற முடிவோடே இப்படத்தை இயக்கியிருக்கும் இருவரும், அதில் வெற்றிபெறும் அளவுக்கு படம் கேலி, ஜாலி, கிண்டல், கிளாமர், லிப் லாக், இரட்டை அர்த்த வசனங்கள் என்று யூத்ஃபுல் களேபரங்களாக வழங்கியுள்ளனர். கேம் ஷோவில் கலந்துகொண்ட இருவர் கொலை செய்யப்பட, அதற்கான காரணம் ஃப்ளாஷ் பேக் காட்சிகளாக விரிய, கதையில் திருப்பம் ஏற்படுகிறது! கொஞம் மாறுபட்ட வகையிலான ஒரு கதையை யோசித்த இயக்குனர்கள் அதை கொஞ்சம் சீரியஸாகவும், கொஞ்சம் லாஜிக் விஷயங்களுடனும் சொல்லியிருந்தால் ‘ஒங்கள போடணும் சார்’ மேலும் கவனம் பெற்றிருக்கும்!

படத்தின் பெபெரும்பாலான காட்சிகள் ஒரே பங்களாவுக்குள் நடப்பது மாதிரி அமைந்துள்ளது. இந்த காட்சிகளை அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார். ரஜிமோன் இசையில் பாடல்கள் ரசிக்க முடிகிறது. ஆனால் இந்த கதைக்கு மிகவும் முக்கியமான பின்னணி இசையில் கோட்டை விட்டுள்ளார். மொத்த படத்தையும் 117 நிமிடங்களாக்கி விறுவிறுப்பாக்கியிருப்பதில் படத்தொகுப்பாளர் விஷ்ணுவின் பங்களிப்பு குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது.

மேலே குறிப்பிட்டது மாதிரி படத்தில் பல குறைகள் இருந்தாலும் இரண்டு மணிநேரம் சும்மா பொழுதை கழிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற படமாக அமைந்துள்ளது ‘ஒங்கள போடணும் சார்’.

நடிகர்களின் பங்களிப்பு

ரௌடியாக, மனநோயாளியாக, மூட நம்பிக்கை இல்லாத துணிச்சல் மிக்க இளைஞராக, கேம் ஷோவில் பெண் கெட்-அப் என்று பல்வேறு குணாதிசயங்களுடன் கூடிய கேரக்டரில் ‘ஜித்தன்’ ரமேஷ் நடிப்பில் குறை வைக்கவில்லை. இவருடன் கேம் ஷோவில் பங்கு பெறுபவர்களாக நடித்திருக்கும் வினோத், மிப்பு, சனுஜா, ஜோனிட்டா, பரிச்சிதா, அனு, வைஷாலி ஆகியோரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். டி.வி.சேனல் அதிபராக வரும் மனோபாலா, நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வருபவர், பிரின்சிபாலாக வரும் ‘ராஜாராணி’ பாண்டியா ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

பலம்

1.ஜாலியாக பயணிக்கும் திரைக்கதை!

2. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு

பலவீனம்

1.லாஜிக் விஷயங்கள்

2.பின்னணி இசை

மொத்தத்தில்…

காமெடி, ஹாரர், கிளாமர், இரட்டை அரத்த வசனங்கள் என்று ஜாலியான திரைக்கதையாக பயணிக்கும் இப்படத்திற்கு இளைஞர்களின் வரவேற்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறது!

ஒருவரி பஞ்ச் : திட்டம் போட்டு பழிவாங்கும் கதை!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;