புலனாய்வு ‘பரமகுரு’வானார் சசிக்குமார்!

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் சசிகுமார் நடிக்கும் படம் ‘பரமகுரு’

செய்திகள் 13-Sep-2019 3:30 PM IST Top 10 கருத்துக்கள்

‘கென்னடி கிளப்’ படத்தை தொடர்ந்து சசிக்குமார், நேமிசந்த் ஜபக் தயாரிக்க ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிருத்திவிராஜ் நடிப்பில் ‘டியான்’ என்ற மலையாள படத்தை இயக்கிய ஜீயன் கிருஷ்ணகுமார் இயக்கி வருகிரார். இந்த படத்தில் மலையாள நடிகை மானசா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் குருசோமசுந்தரம், அப்புக்குட்டி, குமாரவேல், மாரிமுத்து ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது. ‘பரமகுரு’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் புலன் விசாரணை கதை அம்சத்துடன் உருவாகி வருகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு ரோனி ரஃபேல் இசை அமைக்கிறார். எஸ்.கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். கே.ஜெ.வெங்கட் படத்தொகுப்பு செய்கிறார். அன்பறிவ் சண்டை காட்சிகளை அமைக்கிறார். ஷிவயாதவ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் தவிர எனை நோக்கி பாயும் தோட்டா, நாடோடிகள்-2, கொம்பு வச்ச சிங்கமடா, ராஜவம்சம், நா நா ஆகிய படங்களும் சசிகுமார் கைவசம் உள்ளன. இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


#Sasikumar #Paramaguru #Vishvanth #JiyenKrishnakumar #Ananya #Kumaravel #Marimuthu #Manasa #Naadodigal2 #NaaNaa #KombuVachaSingamda #Rajavamsam #KabaliVishvanth #VHiteshJhabak #NemichandJhabak

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதிதி


;