‘பாகுபலி’, ‘பாகுபலி-2’, ‘பாக்மதி’ ஆகிய படங்களை தொடர்ந்து அனுஷ்கா பிரபல தெலுங்கு பட இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜ் ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள் என்றும் தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘நிசப்தம்’ என்ற டைட்டிலுடன் வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் அனுஷ்கா மெலிந்த தோற்றத்தில் அழகாக இருக்கிறார். இந்த படத்தில் அனுஷ்காவின் கேரக்டர் பெயர் சாக்ஷி. இந்த படத்தை ‘People Media Factory’ மற்றும் ‘Kona Film Corporation’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிரபல மலையாள திரைப்பட இசை அமைப்பாளர் கோபி சுந்தர் இசை அமைக்கிறார்.
#AnushkaShetty #Sweety #Nishabdham #Silence #Madhavan #Anjali #ShaliniPandey #AlexTerzieff #HemanthMadhukar #GopiSunder #ShaneilDeo #PrawinPudi #ChadRaptor #NeerajaKona #KonaVenkat #PeopleMediaFactory #KonaFilmCorporation
Direction: Priya Krishnaswamy Production: Reckless Roses Cast: R Raju, Sukumar Shanmugam, SP...
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ‘லிங்கா’. இந்த படத்தை ‘ராக்லைன் புரொடக்ஷன்ஸ்’...
’விக்ரம் வேதா’ படத்தை தொடர்ந்து மாதவனும் ஷ்ரத்த ஸ்ரீநாத்தும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து...