‘பிகில்’ ஆடியோ அதிகாரபூர்வ அறிவிப்பு!

விஜய் நடிக்கும் ‘பிகில்’ படத்தின் ஆடியோ வருகிற 19-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 12-Sep-2019 11:51 AM IST Top 10 கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் படம் ‘பிகில்’. இந்த படத்தில் விஜய்யுடன் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, கதிர், யோகி பாபு, ஆனந்தராஜ், ஜாக்கி ஷெராஃப், தேவதர்ஷினி, இந்துஜா, வர்ஷா பொம்மல்லா உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ஹிட்டாகியுள்ள நிலியில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும்விதமான தகவல் ஒன்றை இப்படத்தை தயாரிக்கும் ‘ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் செய்துள்ளார். அதில் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட ஒரு அப்டேட்டுக்காக காத்திருப்பேன். இசை வெளியீட்டு விழாவான அந்நாளில் தளபதியின் பேச்சை கேட்பதற்காக ஆவலாக காத்திருப்பேன். ஆனால் இந்த முறை அந்த அறிவிப்பை நானே வெளியிடுகிறேன்…. என்னால் நம்பவே முடியவில்லை. கனவு நிஜமாகிறது ‘பிகில்’ படத்தின் பாடல்கள் செப்டம்பர் 19 முதல்….’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அந்த ட்வீட்டில் ‘பிகில்’ ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும் இடம் பற்றி குறிப்பிடவில்லை. நமக்கு கிடைத்த தகவலின்படி ‘பிகில்’ ஆடியோ வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற இருக்கிறதாம். விஜய் நடிப்பில் இதற்கு முன் வெளியாகிய் ‘சர்கார்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் இங்கு தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


#Thalapathy #MaheshSKoneru #EastCoastProductions #AGSEntertainment #Bigil #Nayanthara #Indhuja #Kathir #ArchanaKalpathi #BigilReleasesIn400ScreensAcrossApAndTelangana #MissIndia #KeerthySuresh #Atlee #ARRahman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;