‘காவல் துறை உங்கள் நண்பன்’ படத்தை கைபற்றிய பிரபல நிறுவனம்!

‘காவல் துறை உங்கள் நண்பன்’ படத்தை கைபற்றிய லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்!

செய்திகள் 4-Sep-2019 12:26 PM IST Top 10 கருத்துக்கள்

இன்றைய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’. RDM என்பவர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சுரேஷ் ரவி கதையின் நாயகனாக நடிக்க, ரவீணா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கியமான ஒரு கேரக்டரில் ‘மைம்’ கோபி நடிக்கிறார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படத்தின் சென்சார் காட்சியும் சமீபத்தில் நடைபெற்று படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தை விநியோகம் செய்யும் உரிமையை ரவீந்தர் சந்திர சேகரனின் ‘லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் கைபற்றியுள்ளது. சமீபகாலமாக நல்ல கதை அம்சத்துடன் உருவாகும் படங்களை தொடர்ந்து வாங்கி விநியோகம் செய்து வருகிறது இந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பாடல்கள் வெளியாகும் தேதி, மற்றும் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளனர். இந்த படத்திற்கு ஆதித்யா, சூர்யா ஆகியோர் இசை அமைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவை விஷ்ணுஸ்ரீ கவனித்துள்ளார். வடிவேல், விமல்ராஜ் ஆகியோர் படத்தொகுப்பு செய்துள்ளனர். கலை இயக்கத்தை ராஜேஷ் கவனித்துள்ளார்.
#KaavalThuraiUngalNanban #RDM #VJSuresh #RaveenaSR #WhiteMoonTalkies #BRTalkiesCorporation #MimeGopi #LibraProductions

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;