இன்று நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் விவசாயிகள் சார்ந்த பிரச்சனைகள் தான்! இதை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் படம் ‘வாழ்க விவசாயி’. இந்த படத்தில் அப்புக்குட்டியும், வசுந்தராவும் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கின்றனர். இந்த படத்தை எழுதி இயக்கி இருப்பவர் P.L.பொன்னி மோகன்.
‘வாழ்க விவசாயி’ படத்தில் நடித்திருப்பது குறித்து தேசிய விருது பெற்ற நடிகரான அப்புக்குட்டி பேசும்போது, ‘‘எனக்கு ‘அழகர் சாமியின் குதிரை’ படம் பாராட்டுக்களையும், புகழையும் தேடித் தந்தது. அதற்கு பிறகு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வெண்டும் என்ற தெளிவு ஏற்பட்டது. அந்த வகையில் அமைந்துள்ளது ‘வாழ்க விவசாயி’ படத்தின் கதை. ஒரு கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுடன் நாமும் வாழ்ந்த உணர்வை படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணரும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது. இதில் என்னுடன் கதாநாயகியாக நடித்திருக்கும் வசுந்தரா ஒரு அர்ப்பணிப்பு உள்ள நடிகை. அவர் வழக்கமான கதாநாயகி நடிகை கிடையாது. அவருக்கும் இப்படம் நல்ல பெயரை தேடித்தரும் விதமாக அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. கதைப்படி எனக்கு படத்தில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அந்த குழந்தைகளாக வினோத், சந்தியா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் எப்போதும் மிகவும் அவசியமாக இருக்கும் விவசாயம், மற்றும் அது சார்ந்த விஷயங்களை சொல்ல வருகிறது. இந்த படம் விவசாயிகளை நிச்சயம் திரும்பி பாரக்க வைக்கும் விதமாக உருவாகியுள்ளது’’ என்று கூறியுள்ளார் அப்புக்குட்டி!
இந்த படத்தில் அப்புக்குட்டி, வசுந்தராவுடன் ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன், திலீபன், மதுரை சரோஜா, கராத்தே கோபாலன், ஆனந்த ரூபினி ஆகியோரும் நடிக்கின்றனர்.. இந்த படத்திற்கு ஜெய்கிருஷ் இசை அமைக்கிறார். கே.பி.ரதன் சாவந்த் ஒளிப்பதிவு செய்கிறார். பா.பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்கிறார், கலை இயக்கத்தை R.சரவணன் அபிராமன் கவனித்துள்ளார். இந்த படத்தை ‘பால் டிப்போ’ கே. கதிரேசன் தயாரித்து வருகிறார்.
#Appukutty#Tamilcinema #VazhgaVivasayi ##VasundharaKashyap