‘ரேஞ்சர்’ ஆகிறார் சிபி சத்யராஜ்!

தரணீதரன் இயக்கத்தில் சிபி சத்யராஜ், ரம்யா நம்பீசன் இணைந்து நடிக்கும் படத்திற்கு  ‘ரேஞ்சர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது!

செய்திகள் 3-Sep-2019 12:17 PM IST Top 10 கருத்துக்கள்

‘ஜாக்சன் துரை’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இயக்குனர் தரணீதரனும், சிபி ராஜும் இணைகிறார்கள் என்றும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் தகவலை கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி வெளியிட்டிருந்தோம். அதே நேரம் இப்படத்திற்கு ‘ஷிவா’ என்று டைட்டில் வைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலையும் பதிவு செய்திருந்தோம். ஆனால் இப்போது இந்த படத்திற்கு ‘ரேஞ்சர்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று இயக்குனர் தரணீதரன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் இந்த படம் கடந்த ஆண்டு நடந்த சில நிஜ சம்பவங்கள் மற்றும் ‘அவனி’ என்ற புலியை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது என்ற தகவலையும் பகிர்ந்துள்ளார் தரணீதரன்.

‘MG AURAA CINEMAS’ என்ற நிறுவனம் சார்பில் காவ்யா மகேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் சிபி சத்யராஜ் காட்டு இலாகா அதிகாரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அரோல் கரோலி இசை அமைக்கிறார். கல்யாண் வெங்கட் ராமன் ஒளிப்பதிவு செய்கிறார். சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்கத்தை T.N.கபிலன் கவனிக்கிறார். விமல் ராம்போ சண்டை காட்சிகளை அமைக்கிறார்.
#Sibiraj #Ranger #DirectorDharaniDharan #RemyaNambeesan #ArollCorelli #KalyanVenkataraman #Shivanandeeswaran #TNKabilan #VimalRambo #MGAuraaCinemas

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;