சந்தானம் 3 வேடங்களில் நடிக்கும் படம்!

எழுத்தாளர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம்!

செய்திகள் 31-Aug-2019 4:49 PM IST Top 10 கருத்துக்கள்

அறம், குலேபகாவலி, ஐரா ஆகிய படங்களை தயரித்த ‘கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்’ கோட்டபடி ராஜேஷ் அடுத்து தயாரிக்கும் படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பில் ராஜேஷுடன் இயக்குனர் சினீஷும் கை கோர்க்கிறார். இவர் ஜெய், அஞ்சலி நடிப்பில் ‘பலூன்’ என்ற படத்தை இயக்கியவராவர். இது வரை காமெடி கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த சந்தானம் இப்படத்தில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியிலான கதையில் நடிக்கிறார். இந்த படத்தின் டைட்டிலை செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்கு அறிவிக்க இருக்கிறார்கள். இந்த படத்தை எழுத்தாளரும் தமிழ் சினிமாவில் பல வெற்றிகரமான திரைக்கதைகளுக்கு உதவியாக இருந்தவருமான கார்த்திக் யோகி இயக்குகிறார். இந்த படத்தில் சந்தானத்துடன் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் இப்படத்தில் பணிபுரிய இருக்கும் டெக்னீஷியன்கள் குறித்த விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

#Santhanam #KarthikYogi #RKannan #Dagaalty #Sawaari #Balloon #Maangaram #SanthanamSciFiFilmTitleLookAt5PMOnSept5th #SanthanamIn3DifferentRolesInSciFiFilm #SanthanamInSciFiFilm #ServerSundaram

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;