‘அசுரனி’ல் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் பிரபலம் யார் தெரியுமா?

தனுஷின் ‘அசுரன்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பிரகாஷ் ராஜும் நடித்துள்ளார்!

செய்திகள் 29-Aug-2019 1:43 PM IST VRC கருத்துக்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கும் படம் ‘அசுரன்’. ‘கலைப்புலி’ எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் பிரபலம் குறித்த தகவல் நேற்று வரையிலும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் அது குறித்த தகவலை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேசும்போது, ‘‘இந்த படத்தின் ஒரு கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவரை நடிக்க கூப்பிட்டேன். அவர் அப்போது தேர்தல் விஷயங்களில் படு பிசியாக இயங்கி வந்த நேரம்! இருந்தாலும் நான் அழைத்ததும் எப்போ வந்து நடிக்கணும் என்று கேட்டார். நான் சொன்னது மாதிரியே அவர் வந்து 6 நாட்கள் நடித்து கொடுத்தார். அவருடைய கதாபாத்திரம் ‘அசுரன்’ படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். அதைப் போல இந்த படத்தில் டிஜேனு ஒருத்தரும் நடித்திருக்கிறார். இவர் பிரபல ராப் பாடகர்! நடிகை ஆண்ட்ரியாதான் அவரை பற்றி சொன்னார். அவர் இந்த படத்தில் தனுஷின் மகனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்’’ என்று பேசிய வெற்றிமாறன், ‘இந்த படம் தனுஷுக்கு பெரும் பெயரையும், புகழையும் தேடித்தரும்’’ என்றும் சொன்னார். .

#VadaChennai #Vetrimaaran #Dhanush #ManjuWarrier #GVPrakashKumar #Asuran #AsuranAudioLaunch #AsuranFromOctober4th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;