‘அசுரன்’தான் பெஸ்ட் படம்! – தனுஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கும் ‘அசுரன்’ படத்தின் பாடல்கள் வெளியானாது!

செய்திகள் 29-Aug-2019 11:24 AM IST Top 10 கருத்துக்கள்

‘வட சென்னை’ படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனும் நடிகர் தனுஷும் இணந்துள்ள படம் ‘அசுரன்’. ‘கலைப்புலி’ எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷுடன் மஞ்சு வாரியர், பசுபதி, ‘ஆடுகளம்’ நரேன், பவன், ‘ராட்சசன்’ படப் புகழ் அபிராமி, நடிகர் கருணாஸின் மகன் கெவின் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது ‘அசுரன்’ குறித்து தனுஷ் பேசும்போது,

"அசுரன்’ படத்தைப் பொறுத்தவரைக்கும் எல்லாவற்றுக்கும் நம்பிக்கை தான் முக்கிய காரணம். வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்த படத்தில் நான் ஏற்று நடித்திருக்கும் கதாப்பாத்திரம் எனது 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பினை! இது மாதிரி வேறு நடிகருக்கு கிடைக்குமா என்பது தெரியவில்லை. இந்தப் படம் கண்டிப்பாக ஒரு முக்கியமான படமாக இருக்கும். மஞ்சுவாரியாரின் திறமை எனக்குப் பிடிக்கும். அவரோடு நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருந்தது. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் மண் சார்ந்த இசையை கொடுத்திருக்கிறார். ‘வடசென்னை’ தான் வெற்றிமாறனின் பெஸ்ட் படம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது சொல்கிறேன் ‘அசுரன்’ தான் அவரது பெஸ்ட் படம். ‘வட சென்னை’ படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆவலாய் இருந்தேன். ஆனால் அதற்கு முன் இந்த படத்தை (அசுரன்) செய்ய வேண்டியதாக வந்தது. ‘வட சென்னை-2’ பட வேலைகள் விரைவில் ஆரம்பமாகும்’’ என்றார் தனுஷ்! அக்டோபர் 4-ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘அசுரன்’ படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

#Asuran #Dhanush #Vetrimaaran #ManjuWarrier #Pasupathy

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;