‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸி’ன் 18-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் சர்வானந்த், ரிது வர்மா நடிக்க தமிழ், தெலுங்கில் உருவாகும் படம்!

செய்திகள் 28-Aug-2019 3:14 PM IST Top 10 கருத்துக்கள்

‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘NGK’, ‘ராட்சசி’ உட்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபுவின் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம். இந்த நிறுவனம் கார்த்தி நடிப்பில் தயாரித்துள்ள ‘கைதி’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் இந்நிறுவனம் அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் சர்வானந்த் கதாநாயகனாகவும், ‘துருவநட்சத்திரம்’ படத்தில் நடித்துள்ள ரிது வர்மா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாசர், சதீஷ், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் 18-ஆவது தயாரிப்பாக உருவாகும் இந்த படத்திற்கு ‘துருவங்கள் பதினாறு’, ‘நரகாசூரன்’, ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’, ‘டியர் காமரேட்’ முதலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார். ‘துருவங்கள் பதினாறு’, ’சென்னையில் ஒரு நாள்-2’, ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ மற்றும் சில மலையாள படங்களுக்கு இசை அமைத்துள்ள ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார். ‘கைதி’ படத்தை தொடர்ந்து இப்படத்திற்கும் கலை இயக்கம் செய்கிறார் என்.சதீஷ்குமார். அரவிந்த்ராஜ் பாஸ்கரன் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.

வாழ்க்கையில் பிரிக்க முடியாத விஷயங்களான நட்பு, காதல், தாய்ப்பாசம், இவற்றை பின்னணியாக கொண்டு ஜனரஞ்சகமாக அமைக்கப்பட்டுள்ளது இப்படத்தின் கதை. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தை 2020 கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
#PrductionNo18 #DreamWarriorPictures #Sharwanand #RituVarma #Sathish #RameshThilak #Nassar #DWP #ShreeKarthick #SRPrakashBabu #SRPrabhu #BilingualFilm #JakesBejoy #SujeethSarang #SreejithSarang

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கைதி ட்ரைலர்


;