வைபவ் படத்தை கைபற்றிய பிரபல நிறுவனம்!

வைபவ், பாலக் லல்வானி நடிக்கும் ‘சிக்சர்’ படத்தின் சாட்லைட் உரிமையை விஜய் டிவி நிறுவனம் கைபற்றியது!

செய்திகள் 28-Aug-2019 12:48 PM IST Top 10 கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில், வைபவ், பாலக் லல்வானி கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கும் படம் ‘சிக்சர்’. அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 30-ஆம் தேதி வெளியாகிறது. ‘வால்மேட் என்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் சாட்லைட் உரிமையை விஜய் டி.வி. நிறுவனம் கைபற்றியுள்ளது. வைபவ் நடித்த படங்களிலேயே அதிக விலைக்கு சாட்லைட் உரிமை விற்கப்பட்ட படம் இதுதானாம்! ராதாரவி, சதீஷ், ராமர், இளவரசு, ஆர்.என்.ஆர்.மனோகர், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் நடித்திருக்கும் இந்த படத்தில் வைபவ் இரவு நேரங்களில் கண் தெரியாத இளைஞராக நடித்துள்ளார். இதனால் வைபவுக்கு ஏற்படும் பிரச்சனைகளை காமெடியாக சொல்லும் படமே ‘சிக்சர்’. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோமின் படத்தொகுப்பு செய்துள்ளார்.

#Sixer #Ghibran #Vaibhav #PallakLalwani #PGMuthaiah #BabaBlackSheep #TridentArts #Chachi #WallMareEntertainment #SixerIsCensoredWithU #SatelliteRightsOfSixerIsAcquiredByVijayTV

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டான டீஸர்


;