‘ஜெயம்’ ரவி படத்தில் முதன் முதலாக இணையும் பிரபலம்?

அஹமத் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்!

செய்திகள் 28-Aug-2019 12:23 PM IST Top 10 கருத்துக்கள்

‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய அஹமத் அடுத்து இயக்கும் படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக ‘ஜன கண மனா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் அசர்பைஜானில் துவங்கி நடைபெற்று வருகிறது என்றும், இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக டாப்சி நடிக்க, இவர்களுடன் அர்ஜுன், இரான் நாட்டு நடிகை ELNAAZ NOROUZI ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள் என்றும் தகவலை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்கள் நடித்த படங்களுக்கு இசை அமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரையிலும் ‘ஜெயம்’ ரவி நடிக்கும் படத்திற்கு இசை அமைத்ததில்லை. அந்த முறையில் ‘ஜெயம்’ ரவியும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணையும் முதல் படமாக ‘ஜன கண மனா’ அமைந்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#JayamRavi #TaapseePannu #Ahmed #ArjunSarja #ElnaazNorouzi #EndrendrumPunnagai #Vaamanan #Manithan #JanaGanaMana #ARRahmanWithJayamRavi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;