‘ஜெயம்’ ரவி படத்தில் இரான் நாட்டு நடிகை!

அஹமத் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடிக்கும் படத்திற்கு ‘ஜன கண மனா’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது!

செய்திகள் 27-Aug-2019 2:24 PM IST Top 10 கருத்துக்கள்

‘ஜெயம்’ ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கோமாளி’. இந்த படத்தை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி, ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் அசர்பைஜானில் துவங்கி நடைபெற்று வருகிறது என்றும் இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார் என்றும் தகவலை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த படம் குறித்த மேலும் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘ஜன கண மனா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவி இராணுவ அதிகாரியாக நடிக்க, இவருடன் ஒரு முக்கிய கேரக்டரில் அர்ஜுனும் மற்றொரு முக்கிய கேரக்டரில் இரான் நாட்டு நடிகையான ELNAAZ NOROUZI ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. ஒரு சில படங்கள் மற்றும் ஹிந்தி சீரியல்கள், பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ள ELNAAZ NOROUZI இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
#JayamRavi #TaapseePannu #Ahmed #ArjunSarja #ElnaazNorouzi #EndrendrumPunnagai #Vaamanan #Manithan #JanaGanaMana

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;