சென்ற வருடம் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘நடிகையர் திலகம்’, ‘சீமராஜா’, ‘சண்டக்கோழி-2’, ‘சாமி-2’, ‘சர்கார்’ ஆகிய படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தெலுங்கில் வெளியான ‘மகாநடி’ படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் இப்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இது கீர்த்தி சுரேஷின் 20-ஆவது படம் என்பதால் ‘கீர்த்தி-20’ என்ற பெயரில் படமாகி வந்த இப்படத்திற்கு இப்போது ‘மிஸ் இந்தியா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் நேற்று மாலை படக்குழுவினர் வெளியிட்டனர். ‘ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை நரேந்திர நாத் இயக்கி வருகிறார். தமன் இசை அமைத்து வருகிறார். நேற்று வெளியான ‘மிஸ் இந்தியா’ டீஸரில் உடல் எடையை குறைத்து மெலிந்த உடலுடன் காணப்படுகிறார் கீர்த்தி சுரேஷ்! இந்த படம் தவிர போனி கபூர் தயாரிக்கும் ‘மைதான்’ என்ற ஹிந்தி படத்தில் நடிக்கவும் கீர்த்தி சுரேஷ் கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Keerthy20 #MissIndia #KeerthySuresh #SSThaman #Narendranath
‘மைதான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரியாக இருந்த கீர்த்தி சுரேஷிற்கு கடைசி நேரத்தில் அந்த...
கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து ஹிந்தியில் எடுக்கப்படும் படம் ‘மைதான்’ என்றும் இந்த படத்தில் அஜய்...
‘நடிகையர் திலகம்’ படத்திற்காக தேசிய விருதை வென்று தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்த்த நடிகை கீர்த்தி...