மலையாள படத்திற்காக பாடல் எழுதி பாடிய தனுஷ்!

பிருத்திவி ராஜ் நடிக்கும் ‘பிரதர்ஸ் டே’ படத்திற்காக தனுஷ் எழுதி பாடிய பாடல் இன்று மாலை வெளியாகிறது!

செய்திகள் 27-Aug-2019 11:14 AM IST Top 10 கருத்துக்கள்

பிருத்திவிராஜ் கதாநாயகனாக நடிக்கும் மலையாள படம் ‘பிரதர்ஸ் டே’. நடிகர் கலாபவன் ஷாஜோன் (ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தில் மந்திரியாக நடித்தவர்…) இயக்கும் இந்த படத்தில் பிருத்திவிராஜுடன் ஐஸ்வர்யா லட்சுமி, பிரயாகா மார்ட்டின், மியா ஜார்ஜ், ஹிமா, மடோனா செபாஸ்டியன் என ஐந்து கதாநாயகிகள் நடிக்கிறார்கள். தமிழ் நடிகர் பிரசன்னாவும் இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.

தமிழில் சில படங்களை தயாரித்த லிஸ்டின் ஸ்டீஃபன் தயாரிக்கும் இந்த படத்திற்காக தனுஷ் ஒரு பாடலை எழுதி பாடவும் செய்துள்ளார். சூப்பர் ஹிட்டான் ‘ரௌடி பேபி….’ பாடலுக்கு பிறகு தனுஷ் எழுதி, பாடும் இந்த பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. ‘4 மியூசிக்ஸ்’ நாதிர்ஷா இசை அமைக்கும் இந்த படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அடுத்த மாதம் 6-ஆம் தேதி வெளியாகிறது. ஏற்கெனவே ஒரு சில மலையாள படங்களில் நடித்துள்ள தனுஷ் ஒரு மலையாள படத்திற்காக பாடல் எழுதி பாடுவது இதுதான் முதன் முறை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;