விஜய்ஆண்டனியின் ‘தமிழரசன்’ அப்டேட்!

‘தமிழரசன்’ படத்திற்கான டப்பிங் வேலைகளை முடித்துவிட்டார் மோகன் ராஜா மகன் பிரணவ்!

செய்திகள் 26-Aug-2019 3:23 PM IST Top 10 கருத்துக்கள்

விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்கள் ‘தமிழரசன்’, ‘அக்னி சிறகுகள்’ மற்றும் ‘காக்கி’. இதில் பாபு யோகேஸ்வரன் இயக்கி வரும் ‘தமிழரசன்’ படத்தை ‘எஸ்.என்.எஸ்.மூவீஸ்’ நிறுவனம் சார்பில் கௌசல்யா ராணி தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, ராதாரவி, சோனு சூட், யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இப்போது டப்பிங் உட்பட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இளையராஜா இசை அமைக்கும் இந்த படத்திற்காக கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர் என்ற தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இவர்கள் இருவரும் இளையராஜா இசையில் இப்படத்திற்காக பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

#SureshGopi #VijayAntony #PranavMohan #Ilaiyaraaja #Thamilarasan #RemyaNambeesan #Pranav #Khakhee #KJYesudas #Sangeetha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;