ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு ரஜினி பட டைட்டில்!

எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் ‘ஆயிரம் ஜென்மங்கள்’

செய்திகள் 26-Aug-2019 1:17 PM IST Top 10 கருத்துக்கள்

சசி இயக்கத்தில், சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்க உருவாகி வரும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. இந்த படத்தை தயாரித்து வரும் ‘அபிஷேக் ஃபிலிம்ஸ்’ ரமேஷ் பிள்ளை, எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க மற்றொரு படத்தையும் தயாரித்து வருகிறது என்ற தகவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். எழிலும், ஜி.வி.பிரகாஷும் முதன் முதலாக இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெயர் சூட்டப்படாமல் படப்பிடிப்பு நடந்து வந்த இப்படத்திற்கு இப்போது ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரஜினி, பத்மப்ரியா, லதா நடிப்பில் இதே ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற டைட்டிலுடன் ஒரு படம் 1978-ல் வெளியாகியுள்ளது. இப்போது அதே டைட்டில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. எழிலின் காமெடி ஃபார்முலாவில் ஹாரர் ரக படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு சி.சத்யா இசை அமைக்கிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஈஷா ரெபா, நிகிஷா பட்டேல், சாக்ஷி அகர்வால், வென்பா, சதீஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு சத்யா இசை அமைக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார்.

#GVPrakash #Ramesh #CSathya #Ezhil #AayiramJenmangal #EeshaRebba #NikeshaPatel #Venba #Sathish #UKSenthilKumar #GopiKrishna #CSathya

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஐங்கரன் ட்ரைலர்


;