அழுதுகொண்டே எடுத்த காமெடி படம்! – இயக்குனர் சாச்சி

சாச்சி இயக்கத்தில் வைபவ், பாலக் லல்வானி நடிக்கும் சிக்சர் இம்மாதம் 30-ஆம் தேதி ரிலிசாகிறது!

செய்திகள் 23-Aug-2019 12:23 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில், வைபவ், பாலக் லல்வானி கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கும் படம் ‘சிக்சர்’. ‘வால்மேட் என்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் ராதாரவி, சதீஷ், ராமர், இளவரசு, ஆர்.என்.ஆர்.மனோகர், ஸ்ரீரஞ்சனி உட்பட பலர் நடித்துள்ளனர். இரவு நேரங்களில் கண் தெரியாத ஒரு இளைஞரின் வாழ்க்கையை மையமக வைத்து காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம் இம்மாதம் 30-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் இயக்குனர் சாச்சி பேசும்போது,

‘‘இது காமெடி படம்! ஆனால் அழுதுகொண்டேதான் எடுத்தோம். அவ்வளவு பிரச்சனைகளை, கஷ்டங்களை சந்தித்து எடுத்த படம் இது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் கேட்டதை எல்லாம் கொடுத்து படத்தை நினைத்தது மாதிரி எடுக்க உதவினார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது! எல்லோரும் பார்த்து விட்டு சொல்லுங்கள்’’ என்றார்.

படத்தின் கதாநாயகன் வைபவ் பேசும்போது, ‘‘இந்த படத்தை இயக்குனர் சாச்சி கவனமாக எடுத்திருக்கிறார். இந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடித் தந்துள்ளார். அவருக்கு நன்றி! இந்த படத்தை இயக்கியிருக்கும் சாச்சியிடம், ‘சாச்சி என்ன பேரு இது?’ என்று கேட்டேன். அதற்கு அவர் இயக்குனர் அட்லி மாதிரி பேரு வச்சிருக்கேன் என்றார். சாச்சியின் நிஜ பெயர் திவாகர்! இந்த படத்தை சாச்சி சிறப்பாக எடுத்திருக்கிறார். இந்த படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்’’ என்றார் வைபவ்!

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோமின் படத்தொகுப்பு செய்துள்ளார்.

#Sixer #Ghibran #Vaibhav #PallakLalwani #PGMuthaiah #BabaBlackSheep #TridentArts #Chachi #WallMareEntertainment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;