‘ஜாம்பி’ புதிய முயற்சி! – இயக்குனர் பொன்ராம்

யோகி பாபு, யாஷிகா ஆனந்த் நடிக்கும் ஜாம்பி இம்மாதம் 30-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 22-Aug-2019 4:11 PM IST Top 10 கருத்துக்கள்

‘S3 பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் வசந்த், முத்துக்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஜாம்பி’. இந்த படத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ‘மோ ’படத்தை இயக்கிய புவன் நல்லான் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படமான இப்படத்திற்கு பிரேம்ஜி இசை அமைத்துள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது படத்தின் இயக்குனர் புவன் நல்லான் பேசும்போது,

‘‘யோகிபாபு எனக்காகதான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஒரு நல்ல கூட்டணி அமைந்ததில் மகிழ்ச்சி. 'ஜாம்பி' மாதிரியான படம் எடுக்கும்போது தொழில்நுட்ப கலைஞர்களின் உதவி பெரும்பங்கு வகிக்கும். அது இந்த படத்தில் எனக்கு நன்றாக அமைந்திருக்கிறது. அதனால் நான் நினைத்தது மாதிரி படத்தை எடுக்க முடிந்தது. இந்த படம் குழுந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும்’’ என்றார்.

படத்திற்கு இசை அமைக்கும் பிரேம்ஜி பேசும்போது, ‘‘யோகி பாபுவை எனக்கு மிகவும் பிடிக்கும். ரீ ரெக்கார்டிங் செய்யும்போது அவரின் நகைச்சுவையைப் பார்த்துத் தனியாக சிரித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அபிமான நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்கும் படத்திற்கு இசையமைத்ததில் பெரும் மகிழ்ச்சி. இறுதிக் காட்சியில் அமைந்த சண்டைக் காட்சிகள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் எனக்கு பட்டப்பெயர் மாறிக்கொண்டேயிருக்கும். அதேபோல் தான் இந்த படத்திற்கு 'இசை காட்டேரி' என்று வைத்துக் கொண்டேன்’’ என்றார்.

விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் பொன்ராம் பேசும்போது, இந்த படத்தை தயாரித்திருக்கும் வசந்தும், முத்துக்குமாரும் எனது நண்பர்கள். இப்படத்தை நானும் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் என்னால் தயாரிப்பில் பங்குகொள்ள முடியவில்லை. பேய் படத்திற்கு நகைச்சுவை நன்றாக இருந்தால் தான் படம் வெற்றியடையும். அந்த வகையில் இந்தப் படத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். இப்படம் ஒரு புது முயற்சி என்று கூறலாம்! இவர்களது முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள் என்றார்!

இவர்களை தொடர்ந்து விழாவில் நடிகை யாஷிகா ஆனந்த், படத்தின் ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணுஸ்ரீ, பாடலாசிரிய கார்த்தி, படத்தொகுப்பாளர் பொன்ராஜ் ஆகியோரும் பேசினார்கள். ஜாம்பி இந்த மாதம் 30-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பெட்ரோமாக்ஸ் ட்ரைலர்


;