ராதாமோகனின் அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா?

‘காற்றின் மொழி’ படத்தை தொடர்ந்து  ராதாமோகன் இயக்கும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார்!

செய்திகள் 20-Aug-2019 11:47 AM IST Top 10 கருத்துக்கள்

ஜோதிகா நடிப்பில் வெளியான ‘காற்றின் மொழி’ படத்தை தொடர்ந்து ராதா மோகன் தனது அடுத்த பட வேலைகளில் பிசியாகியுள்ளார். ராதா மோகன் அடுத்து இயக்கும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‘மான்ஸ்டர்’. இந்த படத்தின் மூலம் ஃபேமிலி ஆடியன்ஸின் வரவேற்பு பெற்ற எஸ்.ஜே.சூர்யா, அடுத்து ராதாமோகன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படமும் ராதாமோகனின் வழக்கமான பாணியில் உருவாகும் படமாம்! இந்த படத்தின் மற்ற தகவல்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது என்றும் அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அடுத்த மாதம் துவங்க இருக்கிறது என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது!

#SJSuryah #RadhaMohan #Jyotika #KaatrinMozhu #Monster

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜாக்பாட் ட்ரைலர்


;