’பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படம் ‘சாஹோ’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ளது என்று கூறப்படுகிறது. சுதிஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரபாஸுடன் ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப், நீல் நித்தின் முகேஷ், மந்திராபேடி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படம் இம்மாதம் 30-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் ‘சாஹோ’ படக்குழுவினர் நேற்று மாலை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பிரபாஸிடம் ‘சாஹோ’ என்றால் என்ன என்ற கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்து பிரபாஸ் பேசும்போது,
‘சாஹோ’ என்பது ‘ஜெய் ஹோ’ என்று சொல்வது மாதிரி! படத்தை பார்க்கும்போது அதற்கான அர்த்தம் இன்னும் புரிந்துவிடும். ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு வருடத்துக்கு இரண்டு படங்களாவது நடிக்க வேண்டும் என்றுதான் விரும்பினேன். ஆனால் சுஜித் ‘சாஹோ’ கதையை சொன்னதும் அதை செய்ய ஒப்புக்கொண்டேன். இதற்கு இரண்டு வருங்கள் தேவைப்படும் என்று அப்போது தெரியவில்லை. முழுக்க முழுக்க ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் சீனா, ஹாலிவுட் ஆக்ஷன் டைரக்டர்ஸ் பணிபுரிந்துள்ளார்கள். அந்த அளவிற்கு ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்தும் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. இந்தியாவின் பெரும்பாலான இடங்கள் மற்றும் அபுதாபி, இத்தாலி, ஆஸ்திரேலியா, குரேஷியா, ஐரோப்பிய நாடுகள் என்று இப்படத்தின் படப்பிடிப்புகள் நிலைய இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்தியா சினிமாவில் இதுவரை இதுமாதிரி ஒரு ஆக்ஷன் படம் வந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு ‘சாஹோ’ ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த எனக்கு நேரடி தமிழ் படத்தில் நடிக்கவும் ஆசை இருக்கிறது. அந்த ஆசை விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன்’’ என்று சொன்ன பிரபாஸ் வருகிற 23-ஆம் தேதி தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சர்பரைஸ் தர இருக்கிறேன்’’ என்றார்.
பிரபாஸ் சொன்ன அந்த சர்பரைஸ் என்னவாக இருக்கும்? நாம் 23-ஆம் தேதி வரை காத்திருப்போம்!
#Prabhas #Saaho #ShraddhaKapoor #Arunvijay
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
சுந்தர்.சி இயக்கிய ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண்...
‘துருவங்கள் பதினாறு’படப்புகழ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி...