ஆதி நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் படம்!

அறிமுக இயக்குனர் பிருதிவி ஆதித்யா இயக்கத்தில் ஆதி நடிக்கும் இருமொழி படம் ‘க்ளாப்’

செய்திகள் 16-Aug-2019 4:01 PM IST Top 10 கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் பிருதிவி ஆதித்யா இயக்கத்தில் ஆதி சத்தமில்லாமல் நடித்து வந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ‘க்ளாப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ‘பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அகன்ஷா சிங் நடிக்கிறார். இவர்களுடன் கிருஷ்ணா குருப், நாசர், பிரகாஷ்ராஜ், முனீஸ்காந்த், மைம் கோபி ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் ஹைதராபாத்தில் ஒரு தடகள ஸ்டேடியம் உருவாக்கப்பட்டு அங்கே நடைபெற உள்ளது. இளையராஜா இசை அமைக்கும் இந்த படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ராகுல் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்கத்தை வைர பாலன் கவனிக்கிறார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.
#Clap #Aadhi #BigPrintPictures #IBKarthikeyan #PrithviAditya #AkanshaSingh #KrishaKurup #Nasser #Munishkanth #PrakashRaj #MimeGopi #Ilaiyaraaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ட்ரைலர்


;