சிவாவின் ‘சுமோ’ எப்போது ரிலீஸ்?

‘மிர்ச்சி’ சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடிக்கும் ‘சுமோ’ நவம்பர் மாதம் வெளியாகிறது!

செய்திகள் 16-Aug-2019 11:30 AM IST Top 10 கருத்துக்கள்

‘தமிழ் படம்-2’ படத்தை தொடர்ந்து ‘மிர்ச்சி’ சிவா, ‘பார்ட்டி’, ‘சுமோ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘சுமோ’ படத்தை எஸ்.பி.ஹோசிமின் இயக்கி வர, இந்த படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் சிவாவுடன் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் வி.டி.வி.கணேஷ், யோகி பாபு ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

இந்தோ - ஜாப்பானிஸ் படமாக ‘சுமோ’ உருவாகி வருகிறது. சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் முதல் இந்தியத் திரைப்படம் இது என்கிறார்கள் இப்படக்குழுவினர். பொதுவாக ஜப்பானில் படப்பிடிப்பு நடத்துவது கடினம். ஆனால் ‘சுமோ’ படத்தின் படப்பிடிப்பை 35 நாட்கள் ஜப்பானில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். இந்த படத்தில் சிவா கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களையும் சிவாவே எழுதியுள்ளார். இந்த படத்திற்கு ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். படத்தொகுப்பை பிரவீன் கே.எல்.கவனிக்கிக்றார். கலை இயக்கத்தை கார்த்திக் செய்து வருகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பை ‘சுமோ’ குழுவினர் வெளியிட்டுள்ளர்.

#Sumo #MirchiShiva #RajivMenon #SPHosimin #SumoWrestling #February14 #SPHosimin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அட்ரா மச்சான் விசிலு - டிரைலர்


;