‘‘நான் ஒரு பொண்ணா நடிச்ச படம் கன்னி ராசிதான்’’ – வரலட்சுமி சரத்குமார்

விமல், வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடிக்கும் ‘கன்னி ராசி’ இம்மாதம் ரிலீசாகிறது!

செய்திகள் 13-Aug-2019 3:39 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ‘மன்னர் வகையறா’, ‘களவாணி-2’ ஆகிய படங்களை தொடர்ந்து விமல் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘கன்னி ராசி’. சமீபத்தில் வெளியான ‘தர்மபிரபு’ படத்தை இயக்கிய முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விமலுடன் கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ‘யோகி’ பாபு, ‘ரோபோ’ சங்கர், காளிவெங்கட் என்று பலர் நடித்திருக்கும் இந்த படத்தை ‘கிங் மூவி மேக்கர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் பி.ஷமீம் இப்ராகிம் தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக இருப்பதை முன்னிட்டு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை சென்னையில் நடைபெற்றது. அப்போது கதாநாயகன் விமல் பேசும்போது,

‘‘படத்தின் கதைப்படி என் வீட்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் கன்னி ராசி. எல்லோரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்! அப்படியிருக்க நான் மட்டும் பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ண்ணைதான் திருமணம் செய்வேன். அதுவும் பத்திரிகை அடித்து உற்றார் உறவினர்கள் சொந்த பந்தங்களுடன் தான் திருமணம் செய்வேன் என்று இருக்கும் கேரக்டர். இப்படியிருக்க, எனது திருமணம் எப்படி நடக்கிறது என்பதை காமெடி கலந்து சொல்லும் படமே ‘கன்னி ராசி’’ என்றார்.

படத்தின் கதாநாயகி வரலட்சுமி சரத்குமார் படம் குறித்து பேசும்போது, ‘‘நான் முதன் முதலாக முழு ஸ்கிரிப்ட்டையும் கேட்டு நடித்த படம் இதுதான். கதையை கேட்கும்போதே விழுந்து விழுந்து சிரித்தேன். ‘போடா போடி’ படத்திற்கு பிறகு நான் காமெடி படம் நடித்ததில்லை. ‘ரோபோ’ சங்கர் பேசும்போது சொன்னது மாதிரி நான் ஒரு பொண்ணா நடித்த படம் இந்த ‘கன்னி ராசி’தான். காரணம் இதற்கு முன் நான் நடித்த படங்கள் எல்லாமே அடிதடி, ஆக்‌ஷன் என்றுதான் பண்ணியிருப்பேன். இந்த படத்தில் வருகிற மாதிரி அடக்கமான, அமைதியான ஒரு பெண்ணாக நான் நடித்ததில்லை. இந்த படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் ஒரு ஜாலியான காமெடி படமாக இருக்கும்’’ என்றார். இம்மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள ‘கன்னி ராசி’ படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். எஸ்.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது படத்தொகுப்பு செய்துள்ளார்.

#Kannirasi #KannirasiPressMeet #Vimal #varalaxmi #RoboSankar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;