ஸ்டைலிஷ் ஸ்டாருக்கு வில்லனாகும் சமுத்திரக்கனி!

த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடிக்கிறார்!

செய்திகள் 13-Aug-2019 3:08 PM IST Top 10 கருத்துக்கள்

‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’ என்ற தெலுங்கு படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். ‘AA19’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் ஜெயராம், தபு, பிரம்மானந்தம் ஆகியோரும் நடிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘RRR’ படத்திலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். அல்லு அர்ஜுன் நடித்த ‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’ தமிழில் ‘என் பெயர் சூர்யா என் நாடு இந்தியா’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
#AlluArjun #AA19 #Samuthirakani #TrivikraSrinivas #PoojaHedge #NivethaPethuraj #AlluAravind

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;