எஸ்.பி.ஜனநாதன இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிக்கும் படம் ‘லாபம்’. . விஜய் சேதுபதியின் ‘விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸு’ம், ‘7CS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி ராஜபாளையத்தில் துவங்கியது. இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் ஒரு முக்கியமான கேரக்டரில் ஜெகபதி பாபு நடித்து வர, இப்போது இந்த படத்தில் தன்ஷிகாவும் இணைந்துள்ளார்! ஏற்கெனவே எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் பேராண்மை என்ற படத்தில் நடித்த தன்ஷிகா அவரது இயக்கத்தில் நடிப்பது இது இரண்டாவது முறையாகும். அதைப் போல இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதியுடன் முதன் முதலாக இணைந்துள்ளார் தன்ஷிகா!
எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ஒவ்வொரு படமும் சமூகத்துக்கு நல்ல கருத்துக்களை கூறும் படமாக இருக்கும். அந்த வகையில் இந்த படம் விவசாயிகளின் வாழ்நிலையை பேசும் படமாக, சமூகத்துக்கு நல்ல கருத்துக்களை முன் வைக்கும் படமாக இருக்கும் என்கிறார்கள். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
#VijaySethupathi #JagapathiBabu #ShrutiHaasan #Laabam #SPJananathan #SaiDhanshika
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘96’. பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இப்படம்...