நடிகை சனம் ஷெட்டி தயாரிப்பில் ‘பிக்பாஸ்-3’ புகழ் தர்ஷன் நடிக்கும் படம்!

சனம் ஷெட்டி தயாரித்து நடிக்கும் ‘மேகி’ படத்தில் ‘பிக்பாஸ்-3’ புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார்!

செய்திகள் 12-Aug-2019 2:55 PM IST Top 10 கருத்துக்கள்

‘அம்புலி’, ‘விலாசம்’, ‘கதம் கதம்’ உட்பட பல தமிழ் படங்களிலும் ஒரு சில தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள சனம் ஷெட்டி ‘மேகி’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். ‘ரீலிங் பக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் பிரைவெட் லிமிடெட்’ என்ற நிறுவனம் சார்பில் சனம் ஷெட்டி மற்றும் திரு என்பவர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் ‘பிக் பாஸ்-3’ புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, சனம் ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ரமேஷ் திலக், கருணாகரன், அர்ஜுனன், அபிஷேக், பிரவீன் ஆகியோரும் நடிக்கும் இந்த படத்தை ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். சாம்ஸ் சி.எஸ்.இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை கிரிக் வாஹின் செய்கிறார்.

‘மேகி’ படம் குறித்து சனம் ஷெட்டி கூறியதாவது, ‘‘இந்த படத்தின் கதையை கேட்டதும் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. கதாநாயகனாக நடிக்கும் தர்ஷனை முதன் முதலாக விளம்பர படபிடிப்பில் தான் பார்த்தேன். சண்டைக் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் கதைக்கு தர்ஷன் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை கதாநாயகனாக தேர்வு செய்தோம். கதையின் நாயகி மேகாலயாவை சேர்ந்த பெண் என்பதால் அங்கு படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். இப்போது தர்ஷன் ‘பிக்பாஸ்-3’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பதால் அவர் வெளியே வந்ததும் மீதி காட்சிகளின் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க இருக்கிறது’’ என்றார்.

இந்த படத்தின் முதல் பாடலை சமீபத்தில் நடிகர் பாண்டியராஜன் வெளியிட்டார். முதல் பார்வை போஸ்டரை நடிகை ஃபாத்திமா பாபு, நடிகர் பாண்டியராஜன் மற்றும அனிதா அலெக்ஸ் ஆகியோர் வெளியிட்டனர்.

#SanamShetty #Maggi #BiggBoss3Tharshan #ReelingBucksProductionsPvtLtd #SamCS

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;