‘நம்ம வீட்டு பிள்ளை’யாகும் சிவகார்த்திகேயன்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்று பெயரிடப்பட்டுள்ளது!

செய்திகள் 12-Aug-2019 12:14 PM IST VRC கருத்துக்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்ற தகவலை வெளியிட்டிருந்தோம். அதன் படி ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்ற டைட்டிலுடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் 16-ஆவது படமான இப்படத்திற்கு எம்.ஜி.ஆர். பட டைட்டிலான ‘எங்க வீட்டு பிள்ளை’ என்று டைட்டில் வைக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இப்போது ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் பக்ரீத் ட்ரீட்டாக வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபர்ஸ் லுக்கில் இப்படம் அடுத்த மாதம் (செப்டம்பர்) வெளியாகும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ், நட்டி நட்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசை அமைத்து வரும் இந்த படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு வேலைகளை கவனித்து வருகிறார்.

#DirectorPandiraj #NammaVeettuPillai #DImman #SivaKarthikeyan #SunPictures #NirovShah #Veerasamar #AnuEmmanuel #AishwaryaRajesh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு சட்டை ஒரு பல்பம்


;