பாலிவுட் பிரபலம் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்க, சமீபத்தில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. ’தீரன் அதிகாரம் ஒன்று’ படப் புகழ் இயக்குனர் வினோத் இயக்கத்தில் சென்ற 8-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று நல்ல வசூலும் குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு வசூல் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் இரண்டு நாட்களில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரம் இப்படம் தொடர்ந்து ரசிக்ரகளின் பேராதரவுடன் ஓடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தாரியங், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ‘நேர்கொண்ட பார்வை’ தமிழகத்திலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #NerkondaPaarvai #Pink #AjithKumar #BoneyKapoorProductions #ShraddhaSrinath #AbhiramiVenkatachalam #HVinoth #YuvanShankarRaja
’விக்ரம் வேதா’ படத்தை தொடர்ந்து மாதவனும் ஷ்ரத்த ஸ்ரீநாத்தும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து...
‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித்தும், இயக்குனர் எச்.வினோத்தும் மீண்டும் இணைந்துள்ள படம்...
சுந்தர்.சி.இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘ஆக்ஷன்’ படம் இன்று உலகம் முழுக்க வெளியாகிறது. இந்த படத்தை...