ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் இந்திய அளவில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த சினிமா கலைஞர்களுக்கு தேசிய விருது வழங்கி வருகிறது. 66-ஆவது தேசிய விருதுகளுக்கான கலைஞர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில் இந்திய அளவில் சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தேர்வாகியுள்ளார். தெலுங்கில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘மகாநடி’ படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக கீர்த்தி சுரேஷ் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார். இந்த படம் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியானது.
இந்திய அளவில் சிறந்த நடிகர்களாக இருவர் தேர்வாகி உள்ளனர். ஹிந்தியில் வெளிவந்த ‘உரி’ படத்தில் நடித்த விக்கி கௌசல் மற்றும் ‘அந்தாதூன்’ படத்தில் நடித்த ஆயுஷ்மான் குரானா ஆகியோர் சிறந்த நடிகர்களாக தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தமிழ் மொழியில் சிறந்த திரைப்படமாக பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய ‘பாரம்’ என்ற திரைப்படம் தேர்வாகியுள்ளது. மற்ற விருதுகள் குறித்த விவரங்கள் தனியாக வெளியிடப்படும்!
‘மைதான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரியாக இருந்த கீர்த்தி சுரேஷிற்கு கடைசி நேரத்தில் அந்த...
கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து ஹிந்தியில் எடுக்கப்படும் படம் ‘மைதான்’ என்றும் இந்த படத்தில் அஜய்...
‘நடிகையர் திலகம்’ படத்திற்காக தேசிய விருதை வென்று தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்த்த நடிகை கீர்த்தி...