அன்பழகன் இயக்கத்தில் 2012-ல் வெளியாகி கவனம் பெற்ற படம் ‘சாட்டை’. சமுத்திரக்கனி, தம்பி ராமையா, யுவன், மகிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்த இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது ‘அடுத்த சாட்டை’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்திலும் சமுத்திரக்கனி தம்பி ராமையா, யுவன் ஆகியோர் நடிக்க கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். பிரபு திலகின் ‘11:11 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனமும், சமுத்திரக்கனியின் ‘நாடோடிகள்’ நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆசிரியர் பகவான் மற்றும் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா, ஜே.எஸ்.கே.சதீஷ் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவில் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா பேசும்போது,
‘‘எவ்வளவு வளர்ந்தாலும் அதை எல்லாம் தலையில் தூக்கி வைத்துக்கொள்ளாதவர் சமுத்திரக்கனி. நல்ல கருத்துக்கள் உள்ள, நல்ல சிந்தனையுள்ள படங்களை தொடர்ந்து எடுத்து வருகிறார். அவருக்கு கிடைக்கும் காசை அவர் தன் பாக்கெட்டில் வைத்துக்கொள்வது இல்லை. அங்கு வாங்கி வேறு ஒரு இடத்தில் கொடுத்து விடுவார். அப்படி சினிமாவை நேசித்து நல்ல கருத்துக்கள் உள்ள படங்களை சமுதாயத்துக்கு தந்து கொண்டிருக்கிறார். சமுத்திரக்கனி மிகவும் திறமையானவர்! ‘பாகுபலி’யை தாண்டி ஒரு படத்தை அவரால் எடுக்க முடியும். அப்படிப்பட ஒரு அஸ்திரத்தை அவர் கையில் வைத்திருக்கிறார். ஆனால் அது எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அது ஒரு நாள் கண்டிப்பாக நடக்கும். அப்போது ராஜமௌலியை தாண்டி சமுத்திரகனி பேசப்படுவார்! தொடர்ந்து சமூதாயத்துக்கு நல்ல கருத்துக்களை கூறிவரும் சமுத்திரக்கனி ‘அடுத்த சாட்டை’ படம் மூலமாகவும் சமுதாய பணியை செய்ய முன் வந்துள்ளார். அதற்கு இயக்குனர் அன்பழகனும் உறுதுணை புரிந்துள்ளார். இந்த படமும் வெற்றிபெறும் என்பது நிச்சயம்’’ என்றார்.
சமுத்திரக்கனி பேசும்போது, ‘சாட்டை’ படத்தில் நடித்தபோதே பல நெகிழ்ச்சியான சம்பங்கள் நடந்தன. அந்த படத்தில் காட்டியது அப்படியே ஆசிரியர் பகவான் விஷயத்தில் நடந்துள்ளது. ஆசிரியர் பகவானை மாணவர்கள் போக விடாமல் தடுப்பதை டிவியில் பார்த்ததும், அடித்து பிடித்து அவரது தொலைபேசி எண்ணை வாங்கி பேசினேன். அன்றிலிருந்து இன்று வரையிலும் அவருடனான நட்பு தொடர்கிறது. அவர் எழுதிய புத்தகத்தில் பல கேள்விகள் உள்ளன. ஒவ்வொன்றையும் ஒரு படமாக எடுக்கலாம். ‘அடுத்த சாட்டை’ படம் அதில் ஒன்று தான். இந்த படம் வெளியானால் எந்த ஆசிரியரும் தன் மாணவனை வகுப்பை விட்டு வெளியே போ என்று சொல்லமாட்டார்’’ என்ரார் சமுத்திரக்கனி!
#Samuthirakani #AthulyaRavi #AduthaSattaiAudioLaunchPhotos #AduthaSattai #MAnbazhagan #JustinPrabhakaran
‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களின் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கி வரும் படம்...
அறிமுக இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘வால்டர்’. அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்...
தமிழ் சினிமாவில் அவ்வப்போது பெண் இயக்குனர்களின் படங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், பெரிய அளவில்...