‘இந்தியன்-2’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த ‘மான்ஸ்டர்’ நடிகை!

ஷங்கர் இயக்கும், கமல்ஹாசனின் ‘இந்தியன்-2’ படத்தில் பிரியா பவானி சங்கரும் நடிக்கிறார்!

செய்திகள் 7-Aug-2019 11:12 AM IST VRC கருத்துக்கள்

ரஜினி நடிப்பில் ‘2.0’ படத்தை இயக்கிய ஷங்கர் அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’வை இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால் ஒரு நாயகியாக நடிக்கிறார் என்ற அதிகாரபூர்வ தகவலை ஏற்கென்வே வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்தில் மற்றுமொரு பிரபல ஹீரோயின் இணைந்துள்ளார். இந்த தகவலே அவரே தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அவர் பிரியா பவானி சங்கர்! சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிப் படமாக அமைந்த ‘மான்ஸ்டர்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்த பிரியா பவானி சங்கர் ‘இந்தியன்-2’வில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இது குறித்து பிரியா பவானி சங்கர் பதிவிட்டுள்ளதில் ‘‘எனக்கு மிகவும் பிடித்த கமல்ஹாசனுடனும், சித்தார்த்துடனும், காஜல் அகர்வாலுடனும் நடிப்பேன் என்று நான் நினைக்கவில்லை. அதிலும் இயக்குனர் ஷங்கரின் இயக்கம் என்றால் மிகப் பெரிய ஆசீர்வாதம்! ஒரே நேரத்தில் அனைத்து ஆசிகளும் கிடைத்துவிட்டதை போல் உணர்ந்தேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ‘இந்தியன்-2’ படத்தில் பிரியா பவானி சங்கரும், சித்தார்த்தும் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ஷங்கருடன் ‘எந்திரன்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரத்னவேலு மீண்டும் ஷங்கருடன் இப்படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.

#KamalHaasan #KajalAggarwal #DirectorShankar #Indian2 #Indian #AnirudhRavichander #CinematographerRRathnavelu #Siddharth #PriyaBhavaniShankar #Monster

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;