சூர்யாவின் ‘காப்பான்’ ரிலீஸ் தள்ளிவைப்பு?

சூர்யாவின் ‘காப்பான்’ படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 20-ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு!

செய்திகள் 5-Aug-2019 11:18 AM IST Top 10 கருத்துக்கள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சாயிஷா, ஆர்யா, பொம்மன் இராணி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் படம் ‘காப்பான்’. ‘லைகா புரொடக்‌ஷன்ஸி’ன் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நேற்று சன் டி.வி.யில் ஒளிபரப்பானது. இந்த படம் முதலில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்கு ரிலீஸ் மாற்றப்பட்டது. தற்போது ‘காப்பான்’ படத்தின் ரிலீஸ் ரிலீஸ் செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

கே.வி.ஆனந்தும் சூர்யாவும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இப்படம் ரசிகர்கள் மற்றும் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ‘காப்பான்’ படத்தில் மோகன்லால் பிரதமராகவும், சூர்யா பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள இந்த படத்தின் சாட்லைட் உரிமையை சன் டி.வி. நிறுவனமும், வெளிநாட்டு உரிமையை ஃபார்ஸ் ஃபிலிம் நிறுவனமும் கைபற்றியுள்ள தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.

#Kaappaan #KVAnand #LycaProductions #Suriya37 #Bandobast #HarrisJayaraj #SunTV #Anthony #KaappaanFromSeptember20th

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;