விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ‘மார்க்கெட் ராஜா’ பட ஹீரோயின்!

ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தில் காவ்யா தாபர் கதாநாயகியாக நடிக்கிறார்!

செய்திகள் 3-Aug-2019 11:23 AM IST VRC கருத்துக்கள்

‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து ‘அக்னி சிறகுகள்’, ‘தமிழரசன்’ மற்றும் ‘மெட்ரோ’ படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இயக்கும் படம் என பல படங்களில் நடித்து வருகிறார் விஜய்ஆண்டனி. இதில் ‘தமிழரசன்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ‘மெட்ரோ’ படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இயக்கும் படத்தின் வேலைகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காவ்யா தாபர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளர். ‘ஈ மாயா பிரேமிட்டோ’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தமிழில் சரண இயக்கி வரும் ‘மார்க்கெட் ராஜா.எம்.பி.பி.எஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை பிரசாந்த் நடித்த ‘ஜாம்பவான்’, அர்ஜுன் நடித்த ‘வல்லக்கோட்டை’ ஆகிய படங்களை தயாரித்தவரும் இப்போது சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வரும் ‘ராஜவம்சம்’ படத்தை தயாரித்து வருபவருமான T.D.ராஜா தனது ‘செந்தூர் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார். இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார்.என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
#MetroAnandKrishnan #VijayAntony #SenthurFilmsInternational #TDRaja #UruJohanShevanesh #NSUdhayakumar #KavyaThapar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;