பொன்ராம் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனை தொடர்ந்து சசிகுமாரை இயக்கும் பொன்ராம்!

செய்திகள் 31-Jul-2019 11:59 AM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமாராஜா’ ஆகிய மூன்று படங்களை இயக்கினார் பொன்ராம்! ‘சீமராஜா’ படத்தை தொடர்ந்து பொன்ராம் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் விஜய்சேதுபதி இப்போது தன் கைவசம் நிறைய படங்களை வைத்து கொண்டு பிசியாக நடித்து வருவதால், பொன்ராம் இயக்கும் படத்தில் நடிப்பதை கொஞ்ச காலத்துக்கு தள்ளி வைத்திருக்கிறாராம்! இதனால் பொன்ராம் விஜய் சேதுபதி படத்திற்கு முன்னதாக சசிகுமார் நடிப்பில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில், காமெடி ஜானர் படமாக உருவாக இருக்கிறது என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்க இருக்கிறது என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. அத்துடன் இந்த படத்தில் பொன்ராமின் ஆஸ்தான காமெடி நடிகரான சூரி மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிரது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘கென்னடி கிளப்’ ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து சசிக்குமார் நடிப்பில் வளர்ந்து வரும் படம் ‘நா நா’. இந்த படத்தில் சசிகுமார் போலீஸ் அதிகாரிகாய நடிக்க, சரத்குமாரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

#Ponram #SasiKumar #Soori #RajKiran #VaruthapadathaValibarSangam #RajiniMurugan #SeemaRaja #SivaKarthikeyan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;