சிவா நடிக்கும் ‘சுமோ’ – ராஜீவ் மேனன் வெளியிட்ட தகவல்!

ராஜீவ் மேனன் ஒளிபப்திவில் ‘மிர்ச்சி’ சிவா நடிக்கும் ‘சுமோ’

செய்திகள் 31-Jul-2019 10:52 AM IST VRC கருத்துக்கள்

‘தமிழ் படம்-2’ படத்தை தொடர்ந்து ‘மிர்ச்சி’ சிவா, வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சிவா ‘சுமோ’ என்ற படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ரெஸ்ட்லிங் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ‘ஃபிப்ரவரி-14’ படத்தை இயக்கிய ஹோசிமின் இயக்குகிறார் என்றும் இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை சிவாவே எழுதியுள்ளார் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. அத்துடன் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது. அதை அதே நேரம் சென்னையிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறதாம். இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் ராஜீவ் மேனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்ட்டு ‘இரண்டு சுமோ வீரர்கள் பயிற்சிக்காக மோதிக்கொள்கின்றனர். அவர்களின் வேகம், சக்தி ஆகியவை அபாரமாக இருந்தது’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கபபடுகிறது.

#Sumo #MirchiShiva #RajivMenon #SPHosimin #SumoWrestling #February14 #SPHosimin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அட்ரா மச்சான் விசிலு - டிரைலர்


;